'தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
'தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது'
Updated on
2 min read

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி இன்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்துகள் இருப்பு குறித்தும் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கரோனா பேரிடர் காலத்தில் தேவையான அளவு மருந்து மற்றும் மருத்துவ உபகரண்ஙகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் இருப்பு உள்ளது. ரெம்டிசிவர் மருந்து பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் தட்டுப்பாடு இருந்தது. முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு 9.5 லட்சம் அளவுக்கு ரெம்டிசிவர் மருந்துகள் பெறப்பட்டு அவற்றில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு 5.75 லட்சம் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது, தனியார் மருத்துவமனைகளுக்கு 1.15 லட்சம் அளவுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரெம்டிசிவர் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. ஆக ரெம்டிசிவர் மருந்து என்பது தனியார் மருத்துவமனைகள் அவர்கள் கேட்ட அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 115 சி.டி. ஸ்கேன் கருவிகள் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக பேரிடர் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாத காலத்தில் 1,43,530 சி.டி. ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல்வர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு ரூ.25 கோடி தந்து மருத்துவ பணிகள் சுணக்கமில்லாமலும், தொய்வில்லாமலும் நடைபெற தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டுள்ளார்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான பிபிஇ கிட் என்கிற முழு கவச உடைகள் நான்கு வார காலத்திற்கு தேவையான 3.5 லட்சம் அளவுக்கு கையிருப்பில் உள்ளது. என்-95 முகக்கவசம் என்பது 15 லட்சம் அளவிலும், மூன்று லேயர் முகக்கவசம், அதாவது அறுவை சிகிச்சை முகக்கவசம் என்பது 75 லட்சம் அளவுக்கு கையிருப்பில் இருந்துகொண்டுள்ளது. கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் என்பது தேவையான அளவில் இரண்டுமாத கால அளவிற்கு கையிருப்பில் உள்ளது.
கருப்புப்பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து ஆம்போடெரிசின் என்பது நேற்றைய வரைக்கும் 3060 என்ற அளவில் இருந்துகொண்டுள்ளது. அது இன்றைக்கு 9520 என்ற அளவுக்கு உயர்ந்து தொடர்ந்து பெறப்பட்டுள்ளது. முதல்வரால் ஆம்போடெரிசின் மருந்துகள் 30 ஆயிரம் அளவுக்கு தேவையென்று, மத்திய
சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவை தொடர்ந்து படிப்படியாக வந்துகொண்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆம்போடெரிசின் மருந்துகள் கொடுக்கப்பட்டதுபோக, 3,234 என்ற எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளது.
இம்மருந்திற்கு மாற்று மருந்தாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி பொசகொனசோல் என்ற மாற்று மாத்திரை மருந்து 90 ஆயிரம் கொள்முதல் செய்வதற்கு பணம் செலுத்தப்பட்டு, 42 ஆயிரம் மருந்துகள் பெறப்பட்டுள்ளது. அதில் 39,500 மருத்துகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை (பொசகொனசோல்- 300மிகி) 7 ஆயிரம் பெறுவதற்கு முயன்று, 4 ஆயிரம் வரப்பெற்றுள்ளது. அந்த 4 ஆயிரம் தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவைப்படும் மருந்துகள்மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 1.20 லட்சம் நபர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு எச்.ஐ.வி தொற்றுக்கான கூட்டு மருந்து சிகிச்சையினை 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று பரவாமல் தடுக்கும் இத்திட்டத்தினை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இந்திய நாட்டிலேயே முன்னணி மாநிலமாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் பால்வினை நோய் தொற்று சிகிச்சைக்கென 776 சுகவாழ்வு மையம் எனும் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி/எய்ட்ஸால் தொற்றுக்குள்ளான மற்றும் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசால் "எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை (டி.என்.டி.சி.ஏ.ஏ.) ஆரம்பிக்கப்பட்டு, 2008- 2009-ஆம் ஆண்டில் ரூ.5.00 கோடி நிதி வழங்கப்பட்டு தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் சுழல் நிதியாக (ஊடிசயீரள குரனே) வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் ரூ.25.00 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில் 3,139 எச்.ஐ.வி / எய்ட்ஸால் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட / பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.82.50இலட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மைச்செயலாளர்  ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு.உமாநாத், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் திரு.தீபக்ஜாக்ப், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com