டாஸ்மாக் கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. அதன்படி, காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாகவே விற்பனை செய்யவேண்டும்.
ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.
மதுபானம் வாங்க வருவோர் வரிசையில் நிற்க ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை இரண்டு பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
மேலும் கடைகளைத் திறக்கும்போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...