டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலைகளில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு: டிஜிபி திரிபாதி உத்தரவு

சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :13 ஜூன் 2021, 6:14 am

DIN

சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் வழிநெடுக காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும், சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். 

அதன்படி, முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் வருகையின்போது சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜி, ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.