பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம்: ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்

வேதாரண்யம் பகுதியில் 14 வகையான பொருள்கள் அடங்கிய கரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பு மற்றும் 2 ஆம் தவணைத் தொகை ரூ. 2 ,000 வழங்கும் பணி இன்று (ஜூன் 17) தொடங்கியது.

News image
மருதூர் கூட்டுறவு வங்கியில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதை தொடங்கி வைத்த வங்கியின் தலைவர் ப.சோமசுந்தரம்.
Updated On :16 ஜூன் 2021, 7:38 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 14 வகையான பொருள்கள் அடங்கிய கரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பு மற்றும் 2 ஆம் தவணைத் தொகை ரூ. 2 ,000 வழங்கும் பணி இன்று (ஜூன் 17) தொடங்கியது.

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் 5 ஊராட்சிகளில் செயல்படும் 4,528 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதை வங்கியின் தலைவர் ப.சோமசுந்தரம் தொடக்கிவைத்தார்.

ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வங்கியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இயக்குநர்கள் உதயம் முருகையன், இந்திராணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பழனிவேல், சந்திரகலா செந்தில்குமார், வீரதங்கம், மணிமேகலை பாண்டியன், தேவி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.