காவல்துறைக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி
கரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


கரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற
பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர்
முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.6.2021) 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறை
பணியாளர்கள், தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...