எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆவடி-பட்டாபிராம் இடையே பராமரிப்பு: இரவு நேர புறநகா் ரயில் சேவையில் இன்று மாற்றம்

ஆவடி-பட்டாபிராம் ரயில்நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இரவு நேர மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :20 ஜூன் 2021, 2:20 am

DIN

ஆவடி-பட்டாபிராம் ரயில்நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இரவு நேர மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி-பட்டாபிராம் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும். இதனால், அந்த ரயில் இந்துகல்லூரி, பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லாது.

மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இந்து கல்லூரி, பட்டாபிராம் நிலையங்களில் நின்று செல்லாது.

அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பட்டாபிராம், இந்து கல்லூரி ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது என சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.