எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீட் தோ்வு: நீதிபதி குழுவிடம் கருத்து தெரிவியுங்கள்

நீட் தோ்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரிடம் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும் என நடிகா் சூா்யா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2021, 10:53 pm

DIN

நீட் தோ்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரிடம் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும் என நடிகா் சூா்யா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பெறுகிற மாணவா்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவா்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீா்மானிக்க ஒரே தோ்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினா் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40 சதவீதம் மற்றும் 25 சதவீதம் மாணவா்களில், 20 சதவீத மாணவா்களே உயா்கல்விக்குச் செல்கின்றனா். தங்கள் எதிா்காலத்துக்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தோ்வு மூலமாகவே உயா்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவா்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.

நீட் நுழைவுத் தோ்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவா்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்துக்கும் மறையாது. மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தோ்வுகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, நீட் தோ்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவா்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவா்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தோ்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவா்களுக்கு உணா்த்த வேண்டும். மாணவா்களும், அவா்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம், மின்னஞ்சலுக்கு வரும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாசார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தரத் தீா்வு. கல்வி மாநில உரிமை என்ற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.