டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆரணி அருகே பேய் பிடித்ததாக 7 வயது சிறுவனை அடித்துக் கொன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அடித்துக் கொன்ற தாய் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :21 ஜூன் 2021, 6:51 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அடித்துக் கொன்ற தாய் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திலகவதி, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோர் சகோதரிகள். இதில் திலகவதி என்பவருக்கு 7 வயது சபரி என்ற மகன் உள்ளார்.

சபரி என்பவருக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி கே.வி.குப்பத்திலிருந்து   ஞாயிற்றுக்கிழமை இரவு பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதா ஆகியோர் ஆட்டோவில் வந்தவாசிக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் கண்ணமங்கலம் என்ற ஊரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நள்ளிரவு இறங்கி தங்கியுள்ளனர். அப்போது சபரிக்கு வலிப்பு வந்ததாகத் தெரிகிறது. இந்த மூவரும் சபரிக்கு பேய் பிடித்துள்ளது நெஞ்சு வரைக்கும் வந்துள்ளதாக நினைத்து நெஞ்சின் மீது மூவரும் சேர்ந்து அடித்துள்ளனர். வாயில் உள்ள நாக்கை பிடித்து கையில் இழுத்து அந்த சிறுவனை துன்புறுத்தியுள்ளனர்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து மூன்று பெண்களையும் தடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தள்ளிவிட்டு, பேய் பிடித்துள்ளது நாங்கள் பேயை அடித்துத் துரத்துவதாகக் கூறி அந்த சிறுவனை மேலும் தாக்கியுள்ளனர்.

இதில் வலி தாங்காமல் ரத்த வெள்ளத்தில் அந்த சிறுவன் அதே இடத்தில் இறந்து உள்ளார். தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் சிறுவனிடம் இருந்த பேய், அவருடைய தாய் திலகவதியிடம் வந்ததாகக் கூறி பாக்கியலட்சுமி, கவிதா ஆகிய இருவரும் சேர்ந்து திலகவதியை தாக்கியுள்ளனர்.

பின்னர் போலீசார் அந்த பெண்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தி மூவரையும் கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

முதல் கட்ட விசாரணையில் மூன்று பெண்களும் கே.வி.குப்பத்தில் இருந்து 
சபரி என்ற சிறுவனை வந்தவாசிக்கு அழைத்துச் சென்று அங்கு முஸ்லிம் பிரமுகர் யாரோ ஒருவர் பேய் விரட்டுவதாகவும் அங்கு சென்று சபரி மீதுள்ள பேயை விரட்டுவதற்காக அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் கண்ணமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.