ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தமிழகத்தில் மேலும் 5,755 பேருக்கு கரோனா; 150 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,755 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஜூன் 2021, 3:00 pm

DIN

தமிழகத்தில் புதிதாக 5,755 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,755 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும், திருப்பூரில் 361 பேருக்கும், சென்னையில் 350 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,55,332ஆக உயர்ந்துள்ளது. 
அதேபோன்று பலி எண்ணிக்கையும் 150-ஆகக் குறைந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 32,051-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 8,132 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை  23,75,963-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 47,318 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 1,71,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.