தமிழகத்தில் ஒரேநாளில் 5,415 பேருக்கு கரோனா; 148 பேர் பலி
தமிழகத்தில் ஒரேநாளில் 5,415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒரேநாளில் 5,415 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,415 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,60,747 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 671 பேருக்கும், ஈரோட்டில் 574 பேருக்கும், சேலத்தில் 369 பேருக்கும், திருப்பூரில் 337 பேருக்கும், சென்னையில் 314 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 7,661 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,83,624-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 44,924 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று மேலும் 148 போ் பலியாகினர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 32,199-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...