சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைபாடு. கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத் தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, பேரவையில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும்.