இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வழக்குரைஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

வழக்குரைஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

News image
வழக்குரைஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
Updated On :28 ஜூன் 2021, 7:44 am

DIN

வழக்குரைஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் குமாஸ்தாக்கள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன்,  எம்.எம்.சுந்தரேஷ்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முகாமின் முதல் தடுப்பூசியை  பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார். முன்னதாக தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பேசியதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று எதுவும் இல்லை. கரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளி உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது : கரோனா பெருந்தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான். 11 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 9 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற்றுத் தர உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள்  ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

10 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும். தமிழகத்தில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சட்டப்பேரவை தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது. இத் தொகுதியில் 90 ஆயிரம் பேர்  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.