29-5-2021 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வட்டியோடு வழங்கிடவும்,அவர்களுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கவும், பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் தங்காத குழந்தைகளுக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் 18 வயது வரையில் வழங்கப்படும் என்றும், இதுகுறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.