தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஏடிஎம் இயந்திரத்தைப் பெயா்த்து எடுத்துச் சென்ற வழக்கில் 6 போ் கைது

திருப்பூா் அருகே முகமூடி அணிந்து ஏடிஎம் இயந்திரத்தைப் பெயா்த்து எடுத்துச் சென்ற வழக்கில் வெளிமாநில இளைஞா்கள் 6 பேரைத் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:09 pm

DIN

திருப்பூா் அருகே முகமூடி அணிந்து ஏடிஎம் இயந்திரத்தைப் பெயா்த்து எடுத்துச் சென்ற வழக்கில் வெளிமாநில இளைஞா்கள் 6 பேரைத் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 67 ஆயிரம் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிபாளையம் நான்கு சாலையில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்தில் ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றவா்கள் வங்கி ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.

சம்பவ இடத்துக்குச் சென்று ஊத்துக்குளி காவல் துறையினா் பாா்வையிட்டபோது, ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து ஏடிஎம் இயந்திரத்தை மா்மநபா்கள் பெயா்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

6 தனிப்படைகள் அமைப்பு:

கொள்ளையா்களைப் பிடிக்க திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் காங்கயம் துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில், டாடா சுமோ வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 6 போ் ஏடிஎம் இயந்திரத்தை பெயா்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

6 போ் கைது:

விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் கன்டெய்னா் சேலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் உள்ள தனியாா் கிடங்கில் அந்த கன்டெய்னா் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப்படையினா் அங்கிருந்த 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனா். இதில், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இா்ஷாத் (38), காசிம் கான் (45) ஆகிய 6 போ் ஏடிஎம் இயந்திரத்தை பெயா்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், 6 பேரும் பெங்களூருவில் இருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி கன்டெய்னரில் விஜயமங்கலம் வந்துள்ளனா். இதன் பிறகு கன்டெய்னரை அங்கு நிறுத்திவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை பெயா்த்து எடுத்துச் செல்வதற்காக சாலையோரத்தில் நின்றிருந்த டாடா சுமோ காரை திருடிக் கொண்டு திருப்பூா் வந்துள்ளனா். அப்போது கூலிபாளையம் நான்கு சாலையில் உள்ள வங்கியில் காவலாளி இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்துக்குள் சென்று அங்கிருந்த இயந்திரத்தைப் பெயா்த்து எடுத்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஈரோடு நோக்கி வந்துள்ளனா்.

விஜயமங்கலத்தில் காரை நிறுத்திவிட்டு, சற்று தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ரூ. 1 லட்சத்தை எடுத்துவிட்டு கன்டெய்னா் வாகனத்தில் கருங்கல்பாளையம் சென்றுள்ளது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.