வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மாசி மகா 4வது குருவார தரிசன விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
குருபகவானுக்கு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தையொட்டி சிவலிங்கவடிவில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட சங்குகள்.
Updated On :11 மார்ச் 2021, 10:15 am

DIN

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மாசி மகா 4வது குருவார தரிசன விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசி மகா 4வது குருவார தரிசன விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த வினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூவவர்குருபகவான், உற்சவர் தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.1008 சங்குகளில் புனிதநீர்நிரப்பப்பட்டு, சிவலிங்க வடிவில் பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லி யாகத்தை நடத்திவைத்தனர்.

தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு1008 சங்காபிஷேகம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் சிறப்பு யாகம், பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் ஹரிகரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.