தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2021, 8:54 am

DIN


சென்னை: கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று தமிழக முதல்வர் பழனிசாமி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா வைரஸ் தொற்று நோய் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு, தமிழ்நாட்டில் 2,682 இடங்களில் அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் 924 இடங்களில் போடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 3,606 இடங்களில் போடப்படுகிறது. மொத்தம் 36.14 இலட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டன. இதில், கோவிஷீல்டு 30.47 இலட்சம், கோவாக்சின் 5.67 இலட்சம். 

இதுவரை, தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 11,25,703. இதில், கோவிஷீல்டு 10,98,857 நபர்கள் போட்டுக் கொண்டனர். கோவாக்சின் 26,846 நபர்கள் போட்டுக் கொண்டனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டு பிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தொழில் நிமித்தமாக வெளியில் செல்கிறோம். பணி நிமித்தமாக அலுவலகத்திற்கு செல்கிறோம். காய்கறிகள் வாங்க கடைக்குச் செல்கிறோம். பொருள்கள் வாங்குவதற்கு கடைக்குச் செல்கின்றோம்.

நல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றோம். இப்படி ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் தொற்று நோய் நமக்கு ஏற்பட்டுவிட்டால் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுவோம். ஆகவே, அந்த பாதிப்பிலிருந்து அனைவரையும் காத்துக் கொள்வதற்கு இப்போது அரசால் தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கோவாக்சின் போட்டுக்கொள்வது குறைவாக உள்ளது...

பதில்: இதற்கு பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது கண்ணுக்குத் தெரியாத ஒரு தொற்று நோய். இந்தத் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றத்தான் தமிழகம் முழுவதும் அரசு மற்றம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. அருள்கூர்ந்து அனைவரும் இந்த நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு என்ன நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது?
பதில்: மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தொடர்ந்து மக்களை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் மக்கள் பின்பற்றினால் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியில் சென்று வீடு திரும்பும்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் வசிக்கின்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றினால் கரோனா வைரஸ் பரவலை நாம் தடுக்கலாம். இதை ஒவ்வொருவரும் அக்கறையோடு செயல்படுத்த வேண்டுமென்பதை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.