2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.52 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :11 மார்ச் 2021, 2:45 pm

DIN

சென்னை விமான நிலையத்தில், ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா முகமது (42) என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது மலக் குடலில் இருந்து 1.23 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்து 1.12 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.

அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, 7 ஐபோன் 12 ப்ரோ, 12 ஏர்பாட்ஸ் ப்ரோ, 10 ஆப்பிள் கடிகாரங்கள், 12 ஆப்பிள் பவர் அடாப்டர்கள், 6 சாம்சங் கேலக்‌சி கடிகாரங்கள், 4 பெட்டி டன்ஹில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.13.7 லட்சம். 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மொத்தம் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றம் எலக்ட்ரானிக் பொருள்கள் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.