கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று 12.30-க்கு வெளியாக வாய்ப்பு?

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று 12.30-க்கு வெளியிட வாய்ப்பு?
Updated On :12 மார்ச் 2021, 6:13 am

DIN


சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணி நேற்று நிறைவு பெற்ற நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

முன்னதாக, நேற்று மாலை வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. இறுதியாக இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. முன்னதாக், வேட்பாளர் பட்டியலை இன்று காலை கருணாநிதி இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்தின் முன் வைத்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு வேட்பாளர் பட்டியலை வைத்து, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில்  வேட்பாளர்களின் பட்டியலை ஸ்டாலின் இன்று ஒரே கட்டமாக வெளியிடுவார் எனத் தெரிகிறது. மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.