சேலத்தில் 8 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது திமுக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
சேலத்தில் 8 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது திமுக
சேலத்தில் 8 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது திமுக
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 10 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில், திமுக கூட்டணியில் ஓமலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் ஆத்தூர், சங்ககிரி மற்றும் மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகள் காங்கிரஸ் மற்றும் மக்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. (சேலம் வடக்கு தொகுதியில் ஆர்.ராஜேந்திரன் 86583 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்).

அதிமுக-திமுக 8 இடங்களில் நேருக்கு நேர் மோதல்:

2021 தேர்தலில் திமுக போட்டியிடும் 10 தொகுதிகளில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுகவை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. அதேவேளையில், சேலம் மேற்கு மற்றும் மேட்டூர் ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவை எதிர்கொள்கிறது திமுக.

அதிமுகவைப் பொறுத்தவரையில் மொத்தம் போட்டியிடும் 9 தொகுதிகளில் திமுகவுடன் 8 தொகுதிகளிலும், காங்கிரஸுடன் ஒரு தொகுதியில் (ஓமலூர்) நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.
கடந்த 2016 தேர்தலில் ஏற்காடு (தனி) தொகுதியில் சி.தமிழ்செல்வன் 83,168 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இவர் கடந்த 2006 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011, 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2016 தேர்தலில் கெங்கவல்லி தொகுதியில் சேலம் மாநகராட்சி முன்னாள் மேயரான ஜெ.ரேகா பிரியதர்ஷினி போட்டியிட்டு 72039 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வெறும் 2,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

7 பேர் புதுமுகம்:
திமுகவில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சி.தமிழ்செல்வன், ஜெ.ரேகா பிரியதர்ஷினி ஆகிய மூன்று பேரை தவிர மீதமுள்ள 7 பேர் புதுமுகங்கள் ஆவர்.
திமுக வேட்பாளர்கள் விவரம்:

1. கெங்கவல்லி (தனி): ஜெ.ரேகா பிரியதர்ஷனி.
2. ஆத்தூர் (தனி): ஜீவா ஸ்டாலின்.
3. ஏற்காடு (எஸ்.டி.): சி.தமிழ்செல்வன்.
4. மேட்டூர்: எஸ்.சீனிவாசபெருமாள்.
5. எடப்பாடி: த.சம்பத்குமார்.
6. சங்ககிரி: கே.எம்.ராஜேஷ்.
7. சேலம் மேற்கு: சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்.
8. சேலம் வடக்கு: ஆர்.ராஜேந்திரன்.
9. சேலம் தெற்கு: எ.எஸ்.சரவணன்.
10. வீரபாண்டி: மருத்துவர் ஆ.கா.தருண்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com