கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டிஜே கோவிந்தராஜனுக்கு வாழ்த்து
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பெரியபாளையம் பேருந்து நிலையத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தோழமைக் கட்சிகளை சந்தித்துப் பேசினார்.


திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி வேட்பாளராக டிஜே கோவிந்தராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பெரியபாளையம் பேருந்து நிலையத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தோழமைக் கட்சிகளை சந்தித்துப் பேசினார்.
அப்போது தோழமைக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் தண்டலம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஊத்துக்கோட்டையில் அண்ணா, காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ஊத்துக்கோட்டையில் பல்வேறு பகுதியில் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். இதில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், நிர்வாகிகள் வழக்கறிஞர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, நிர்வாகிகள் ஆத்துப்பக்கம் ராஜா, ஆத்துப்பக்கம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அன்பு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...