சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கீழ்வேளூர் (தனி) தொகுதியில் நாகை மாலி, திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் சின்னதுரை, அரூர் தொகுதியில் குமார், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, கோவில்பட்டியில் சீனுவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெறுவார்கள்'' என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து பாண்டி களமிறக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக தினகரனை எதிர்த்து சீனுவாசன் போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!
ஈரானின் உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் தேர்வு: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!

ராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!

விஜய்யுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் பதில்!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

