லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொளத்தூர் தொகுதியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் ஸ்டாலின்

நாளை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2021, 4:22 pm

DIN

நாளை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாளைய தினம் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருக்கிறேன். வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு நேராக கலைஞர் பிறந்த திருவாரூருக்கு தான் செல்கிறேன். தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். கலைஞருடைய அந்த திருவாரூர் தொகுதியில் இருந்து தான் என்னுடைய பிரசார பயணம் தொடங்கப்படவிருக்கிறது.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரசார பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த தேதி, எந்தெந்த மாவட்டம் என்பது அறிவிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கிறோம். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் அந்த பிரசார பயணத்தை நடத்தி இருக்கிறோம்.

கடந்த 6 மாதங்களாக பல முறை. ஒரு முறை அல்ல, பலமுறை தமிழ்நாட்டை குறுக்கும் நெடுக்குமாக நான் சுற்றி வந்திருக்கிறேன். அந்த அளவிற்கு பிரசாரம் நடந்து இருக்கிறது. எனவே இன்னும் இருப்பது மிக குறைவான நாட்களே. எனவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரு பக்கத்தில் பிரசாரத்தை தொடங்கிவிருக்கிறார்கள். நம்முடைய திமுக முன்னணியினர் ஒரு பக்கத்தில் பிரசார பயணத்தை தொடங்கவிருக்கிறார்கள்.

எனவே இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். 10 ஆண்டு காலமாக இந்த தமிழகம் பாழ்பட்டு போய்விட்டது. பாழ்பட்டுப்போயிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்று திரள்வோம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.