அந்த மனுவில், இந்த தீர்மானம் சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அதிமுக தொண்டர்களின் பெயர் விவரங்கள் கொண்ட ஆவணங்கள் எதையும் திருத்தாமல் பாதுகாக்கவும், அதிமுக பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளின் அறிக்கையை வழங்கவும், அதிமுக கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. பின்னர், ரூ.1 கோடி மதிப்புக்கு கீழ் உள்ள வழக்கு என்பதால், வழக்கை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்தது.