2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,023 ஆனது

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல, ஒரு நாள் பாதிப்பும் 300-ஐத் தாண்டியுள்ளது.

News image
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,023 ஆனது
Updated On :16 மார்ச் 2021, 6:39 am

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல, ஒரு நாள் பாதிப்பும் 300-ஐத் தாண்டியுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 277 பேரும் கோடம்பாக்கத்தில் 215 பேரும் அண்ணாநகரில் 216 பேரும் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் பாதிப்பு 200க்கும் அதிகமாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,39,131 ஆக உள்ளது. அவர்களில் 2,32,929 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4,179 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 12: 265
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 06: 243
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 03: 184
மார்ச் 02: 167
மார்ச் 01: 171

தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 5,149 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.