எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அதர்மம் வென்ற சரித்திரம் கிடையாது: கரூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

என்றைக்கும் அதர்மம் வென்ற சரித்திரம் கிடையாது என கரூர் பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

News image
கரூர் பேரூந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் மக்களவை முன்னாள் துணைத்தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி.
Updated On :24 மார்ச் 2021, 11:46 am

DIN

என்றைக்கும் அதர்மம் வென்ற சரித்திரம் கிடையாது என கரூர் பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(கரூர்), தானேஷ் என்கிற முத்துக்குமார்(கிருஷ்ணராயபுரம்), என்.ஆர்.சந்திரசேகர்(குளித்தலை) ஆகியோரை ஆதரித்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை காலை 10 மணியளவில் வாக்குகள் சேகரித்து பேசுகையில்,  

முன்னாள் அமைச்சர் சின்னசாமி தாய் கழகத்தில் இணைத்துக்கொண்டது பெருமையளிக்கிறது. எம்ஜிஆர் காலத்திலேயே தனது கட்சிப் பணியை துவக்கி,  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் கரூரில் கட்சியை வளர்த்தவர் சின்னசாமி. கட்சியின் மூத்த தலைவர், பொறுப்புக்குழுவில் இருந்தவர். இப்படிப்பட்டவர்கள் இயக்கத்தில் இருக்கும்போது இன்னும் கழகம் வலிமை பெறும், கட்சி செழுமை பெறும். இதற்காக அவரை வாழ்த்தி  வரவேற்கிறேன்.

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி  தன் ஆதரவாளர்களோடு கட்சியில் இன்று மீண்டும் இணைந்தபோது

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி  தன் ஆதரவாளர்களோடு கட்சியில் இன்று மீண்டும் இணைந்தபோது

12 ஆண்டுகாலம்  வீணாகப்போய்விட்டதாக  ம.சின்னசாமி சொன்னார். ஏற்கனவே அவரிடம் கூறினேன், அது சரியில்லாத கட்சி,  அங்கே உண்மைக்கு, உழைப்புக்கு, நியாயத்துக்கு இடம் கிடைக்காது என்றேன். எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதாவை கண்ட தலைவர் சின்னசாமி. அவர்களின் கொள்கையெல்லாம் கடைப்பிடித்து கட்சியை வளர்த்தவர் சின்னசாமி.

அவரை போன்ற மூத்த நிர்வாகிகள் உழைத்த உழைப்புதான் நாங்கள் உயர்ந்து இந்த பலனை பெற்றிருக்கிறோம். கரூர் மாவட்டத்தில் முத்திரை பதித்தவர் சின்னசாமி. ஏதோ சின்ன பிரச்னைக்காகத்தான் வெளியே சென்றார். இப்போது அவர் வந்துள்ளது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.

கரூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அதிமுகவும், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவும் போட்டியிடுகிறது. கரூர் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எளிமையானவர், நல்ல வேட்பாளர், கூப்பிட்டகுரலுக்கு ஓடோடி வரக் கூடியவர். ஜெயலலிதா போக்குவரத்து துறையை கொடுத்து அவரிடம் நன்மதிப்பை பெற்றவர் விஜயபாஸ்கர். உழைப்பாளி, திறமைமிக்கவர், அனைவரையும் மதிக்கக்கூடியவர். விஜயபாஸ்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தாருங்கள்.

Story image

கிருஷ்ணராயபுரம் அதிமுகவின் கோட்டை. அந்த கோட்டையை எக்கு கோட்டையாக்க முத்துக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அவரும் எளிமையானவர். அவருக்கும் சேவை செய்ய வாய்ப்பு கொடுங்கள். குளித்தலை தொகுதி வேட்பாளரும் எளிமையான வேட்பாளர். அவருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

பாஜக வேட்பாளர் அரவக்குறிச்சி தொகுதியில் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் மற்றும் அவருக்கு பின் வந்த ஜெயலலிதா ஆகிய இருவரும் தெய்வமாக வணங்கக்கூடியவர்கள். நாட்டில் எத்தனையோ கட்சித் தலைவர்கள் வருகிறார்கள், இறக்கிறார்கள். மனிதன் பிறக்கின்றான், இறக்கின்றான். வாழ்ந்த காலத்தில் சாதனை செய்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Story image

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடி மக்கள் கூடவாழ்வில் ஏற்றம் பெற்றது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில்தான். திமுக ஒரு குடும்பக் கட்சி, கார்பரேட் கம்பெனி. அந்த கார்பரேட் கம்பெனியில் செந்தில்பாலாஜி ஷேர் போட்டிருக்கிறார். அது கட்சி அல்ல. கட்சி என்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த கட்சியில் இங்கிருந்து அங்கே போனால் மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர். வருவோருக்கு வாரி கொடுக்கும் கட்சி அல்ல. திமுகவில் எவ்வளவு ஷேர் கொடுக்கிறார்களோ, அந்த அளவிற்கு பதவி கொடுப்பார்கள். இ

ங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கட்சியில் சாதாரணமானவர்கள் கூட விசுவாசமாக இருந்தால் உயர்நிலைக்கு வரமுடியும். இது ஜனநாயக இயக்கம். நாங்கள் இந்த கட்சி இல்லையென்றால் இந்த நிலைக்கு வர முடியுமா, கட்சியில் கிளைச் செயலாளராக பணியைத் துவங்கி, ஒன்றிய மாவட்ட, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பதவிக்கு பிறகுதான் முதல்வராகினேன். நான் எப்போதும் முதல்வராக நினைத்தது கிடையாது. நீங்கள்தான் முதல்வர். மக்கள் போடும் உத்தரவை செயல்படுத்தும் பணி முதல்வர் பணி. ஆனால் ஸ்டாலின் நான் முதல்வராகிவிடுவேன் என கனவு காண்கிறார்.

ஒரே வருடத்தில் இரு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் அந்த கட்சிக்கு போனால் எப்படி இருக்கும். எம்ஜிஆர், ஜெயலிலதாவால் உருவாக்கப்பட்ட கட்சியை கவிழ்க்க அன்றைக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் போல, இன்றைக்கு இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திட்டமிட்டு சதி செய்பவர் செந்தில்பாலாஜி. அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது. என்றைக்கும் தர்மம், நீதி, உண்மைதான் வென்ற சரித்திரம் உண்டும். அதர்மம் வென்ற சரித்திரம் கிடையாது. செந்தில்பாலாஜி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வேஷம் போடுவார், யாரும் ஏமாந்துவிடாதீர்கள். இதுவரை 5 கட்சிக்கு மாறியவர் செந்தில்பாலாஜி.

நம் வேட்பாளர் ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி. செந்தில்பாலாஜி டூப்ளிகேட். அவர் ஒரு போலி. அவரை நம்பாதீர்கள். அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் சொந்தமாக வாங்கித் தருவேன் என்றார். ஆனால் ஒருசென்ட் நிலம்கூட வாங்கிக் கொடுக்கவில்லை. இனிக்க, இனிக்க பேசுவார். எச்சரிக்கையாக இருங்கள். அதிமுக ஊழல் என்கிறார்.

ஸ்டாலின் கரூரிலும் செந்தில்பாலாஜியை பற்றி தவறாக பேசியிருக்கிறார். நல்லவருக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் கரூர் வளர்ச்சி பெறும். பச்சோந்திபோல அடிக்கடி நிறம்மாறுவதுபோல கட்சி மாறுவோருக்கு வாக்களிக்காதீர்கள். ஸ்டாலின் பற்றி செந்தில்பாலாஜி தவறாக பேசியது பேரவைக் குறிப்பில் உள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள் திமுகவினர். அவர்களுக்கு கொள்கை கிடையாது.

கரூர் தொகுதியில் ரூ. 306 கோடியில் 150 மாணவர்கள் பயிலும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் ரயில் நிலைய சந்திப்பு முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மாசாலை, குளத்துப்பாளையம், பசுபதிபாளையம் குகைவழிப்பாதை என எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். தொடர்ந்து சாதனைத்திட்டங்கள் கிடைத்திட அதிமுக அரசை ஆதரியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி,  அதிமுக வேட்பாளர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தானேஷ் என்கிற முத்துக்குமார், என்.ஆர்.சந்திரசேகர் மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகள், அதிமுக மாவட்ட'துணைச் செயலாளர் பசுவைசிவசாமி, அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.