எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 மார்ச் 2021, 10:59 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிக்கை கடந்த 12-ஆம் தேதி வெளியான நிலையில் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்தது.

தோ்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 250-க்கும் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதில், 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 720-க்கும் கூடுதலான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கரூா் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவைகளில் 13 நிராகரிக்கப்பட்டு, 84 மனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கயத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 50 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றில் ஏழு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 40 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இதையடுத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.