திமுகவை மக்கள் மறந்து விட்டார்கள்: முதல்வர்
திமுகவை மக்கள் மறந்து விட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திமுகவை மக்கள் மறந்து விட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, இந்த ஆர்.கே. நகர் தொகுதியை இன்றும் ஜெயலலிதாவின் தொகுதியாக தான் இன்றும் நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இராயபுரம் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ இரயில் திட்டத்திற்கு அம்மா அவர்களே அடிக்கல் நாட்டினார்கள். 3876 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் இன்று திறக்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா எண்ணிய திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்ந்த அரசாங்கம் என் தலைமையிலான தமிழக அரசாங்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி யாரென்றே தெரியாது என்று ஸ்டாலின் பேசி வந்தார். போகும் இடமெல்லாம் என்னைப் பற்றி அவதூறு செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். நாட்டு மக்களை பற்றி திமுக மறந்துவிட்டது, அவர்களது வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்தித்து வந்தார்கள்.
அதனால் மக்கள் திமுகவை மறந்து விட்டார்கள். திமுக ஒரு அராஜக கட்சி. திமுக மீண்டும் வந்தால் அராஜகம் தலைவிரித்தாடும்.
திமுகவினர் பிரியாணி கடைக்கு போய் மூக்குபிடிக்க சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் கடை உரிமையாளரை அடிக்கிறார்கள்.
ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாடு தாங்குமா. மக்களே சிந்தித்துப் பாருங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது, கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு அதிகரித்து விடும். தற்போது மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரம் செய்பவர்கள் நிம்மதியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சி காலத்தில் அப்பாவி மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்தார்கள்.
ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்று திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்காக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற பிரிவை ஏற்படுத்தி, 14,000 ஏக்கர் நிலத்தை உரியவர்களுக்கு மீட்டு தந்தார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...