ஆக்சிஜன் பற்றாக்குறை: செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் திடீர் போராட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்த நோயாளிகளில் ஒருபர் மட்டுமே கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என்று என்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...