மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகாசி அருகே மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு ஆலையில் தீ விபத்து 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கியதில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :7 மே 2021, 10:54 am

DIN

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கியதில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 

சிவகாசி அருகே கீழ பெத்துலு பட்டியில் சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தயாரிப்பு பணி நடைபெறும் இடத்திற்கு தள்ளி உரிய விதிமுறைகளின் கூடிய முடிவடைந்த கம்பி மத்தாப்பூ இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளது.

இந்நிலையில் சிவகாசி பகுதியில் நண்பகல் சுமார் 12 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிடங்கில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கம்பி மத்தாப்பு கல் எரிந்து சாம்பல் ஆனது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் காயமில்லை.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்பி மத்தாப்பு எரிந்து போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் காவல்துறையினர் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் சம்பவ இடத்தை சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.