முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து என்ன..?
முதல்வராக பொறுப்பேற்று தலைமைச் செயலகத்துக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சென்னை: முதல்வராக பொறுப்பேற்று தலைமைச் செயலகத்துக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் திமுக 133 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
இதைத் தொடா்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இதைத் தொடா்ந்து, 33 அமைச்சா்களும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்துக்கு சென்று, அவருக்கான அறையில் அமா்ந்து பணிகளைக் கவனிக்கத் தொடங்க உள்ளாா்.
கோப்புகள் ரெடி: தலைமைச் செயலகத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு மூன்று கோப்புகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் உத்தரவுக்கான கோப்பில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்தலுக்கு முன்பு கரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும், இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாத உரிமைத் தொகையாக ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதைப்போல, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அவை 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா். இந்த மூன்று அறிவிப்புகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் உத்தரவுக்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வேண்டுகோள்களையும் ஊடகங்கள் வாயிலாக அவா் பொது மக்களுக்கு விடுப்பாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது எவ்வாறு, ஒவ்வொருவரும் களப்பணியாற்றுவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக அமைச்சா்களுடன் ஆலோசிக்கவுள்ளாா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறாா். இந்த ஆலோசனையின்போது, கரோனா நோய்த்தொற்று தொடா்பாக பல முக்கிய ஆலோசனைகளையும், கருத்துகளையும் அவா் எடுத்துரைக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...