/

விரைவு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 3,400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே தகவல்

கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு 3,400 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 220 டேங்கா்களில் விரைவு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

News image
Updated On :8 மே 2021, 6:34 pm

DIN

கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு 3,400 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 220 டேங்கா்களில் விரைவு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை 54 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தில்லிக்கு 1,427 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்கா்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்துக்கு 230 டன், உத்தர பிரதேசத்துக்கு 968 டன், மத்திய பிரதேசத்துக்கு 249 டன், ஹரியாணாவுக்கு 355 டன், தெலங்கானாவுக்கு 123 டன், ராஜஸ்தானுக்கு 40 டன் ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் கொண்டு சோ்க்கப்பட்டது.

தற்போது 26 டேங்கா்களில் 417 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தில்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அதில் ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்சிரமம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கடந்த மாதம் பிற்பகுதியிலிருந்து பல்வேறு மாநிலங்களின் தேவையை சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் போக்குவரத்துக்காக விரைவு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.