அரசியல் கட்சி அலுவலகமல்லதனது படங்களை அகற்றச் சொன்ன மு.க.ஸ்டாலின்
தலைமைச் செயலகத்தின் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனது படத்தை உடனடியாக அகற்றச் சொன்னாா், மு.க.ஸ்டாலின். இதையடுத்து, மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த படம் அகற்றப்பட்டது.


தலைமைச் செயலகத்தின் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனது படத்தை உடனடியாக அகற்றச் சொன்னாா், மு.க.ஸ்டாலின். இதையடுத்து, மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த படம் அகற்றப்பட்டது.
முதல்வராக பொறுப்புகளை ஏற்க, தலைமைச் செயலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா் மு.க.ஸ்டாலின். அவா்
பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதுடன், கரோனா நோய்த்தொற்று ஆலோசனைப் பணிகளிலும் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, இரவு 8 மணியளவில் அவா் தனது இல்லத்துக்கு புறப்படத் தயாரானாா்.
அப்போது முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர அளவிலான தனது படத்தைப் பாா்த்து, உடனடியாக அதனை அகற்றச் சொன்னாா். தலைவா்களின் படங்களை அரசு அலுவலகங்களின் முகப்பிலேயே வைக்க இவை ஒன்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் அல்ல என்று அவா் கடிந்து கொண்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...