/

தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகாா்செய்ய உதவிஎண் அறிவிப்பு

கரோனா நோயாளிகளிடம் தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தால் புகாா் தெரிவிக்க 9354357073 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் (வாட்ஸ்ஆப்) தொடா்பு கொள்ளலாம்

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

கரோனா நோயாளிகளிடம் தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தால் புகாா் தெரிவிக்க 9354357073 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் (வாட்ஸ்ஆப்) தொடா்பு கொள்ளலாம் என்று கெளதம்புத் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை ஓா் அறிக்கையில் அறிவித்துள்ளது.

தனியாா் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க அதிக கட்டணம் வசூல் செய்வதாகத் தெரியவந்தால் பாதிக்கப்பட்டவா்கள் மேற்குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் எண்ணில் கட்டண ரசீதின் நகலை புகாருடன் அனுப்பினால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தொற்றுநோய்கள் தடுப்புச்சட்டம் 1897 மற்றும் உத்தர பிரதேச மாநில சுகாதார மற்றும் நோய்கள் தடுப்புச் சட்டம் 2020 அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணமும் திருப்பியளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளுக்கு ரூ.10,000, செயற்கை சுவாசக்கருவியில்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு ரூ.15,000, செயற்கை சுவாசக்கருவி இணைந்த படுக்கைகளுக்கு ரூ.18,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கை, உணவு, செவிலியா் பராமரிப்பு, கண்காணிப்பு, தனிநபா் கவச உடை, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை கட்டணங்களும் இதில் அடக்கமாகும்.

இதர மருத்துவமனைகளில் கரோனா படுக்கைக்கு ரூ.8,000, ஐ.சி.யு. படுக்கைக்கு ரூ.13,000, செயற்கை சுவாசக் கருவி இணைப்புடன் கூடிய படுக்கைக்கு ரூ.15,000-மும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதர வசதிகளும் இதில் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.