எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :9 மே 2021, 3:36 pm

DIN

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு தலைமைச் செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனுபவம் பெற்றவர். கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். 

பேரிடர் காலங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றவர். 

தற்போது வேளாண் துறை செயலாளராக இருந்த இவர் சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ககன்தீப் சிங் பேடி முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.