பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்துக்கு நேரடியாக கோவாக்சின் வழங்கப்படும்: பாரத் பயோடெக் அறிவிப்பு 

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை அனுப்ப உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 மே 2021, 5:33 am

DIN


கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை அனுப்ப உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தமிழகம், ஆந்திரம், அசாம், சத்தீஷ்கர், தில்லி, குஜராத், காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஸா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை கேட்டு விண்ணப்பித்திருந்தன. 

இந்நிலையில், மத்திய அரசின் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி மருந்தை வழங்கி வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு மருந்து இருப்பின் அடிப்படையில் 24 மணி நேரமும் மாநிலங்களுக்கு அனுப்ப இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.