கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழ் மக்களின் உயிர்காக்க நிதி வழங்குவீர்! - உலகத் தமிழர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழக மக்களின் உயிரைக் காக்க  உலகத் தமிழர்கள் நிதியளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :13 மே 2021, 8:21 am

DIN

கரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழக மக்களின் உயிரைக் காக்க  உலகத் தமிழர்கள் நிதியளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் முதல்வர் பேசியதாவது: 

தமிழக அரசு மருத்துவம் மற்றும் நிதி ஆகிய இரண்டு முக்கிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. நெருக்கடியை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும்  தமிழக அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. 

கரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை வீரியம் மிக்கதாக உள்ளது. படுக்கைகள், மருந்து, ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பலரும் நிதி அளித்து வருகின்றனர். அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் இணைந்து பல உதவிகளை அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல உலகத் தமிழர்கள் அனைவரும் நிதி வழங்க முன்வர வேண்டும். உங்கள் நிதி கரோனாவை ஒழிக்க உதவும், மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுக என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.