முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:-
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை முகக் கவசம் அணியாதவா்கள் மீது 9 லட்சத்து 44 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 21, 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை 32, 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...