சென்னை மாநகராட்சிக்கு 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள்
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.


சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சியின் சாா்பில் ஆக்சிஜன் உருளைகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டும், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அவா்களின் சுயவிருப்பத்தின் பேரில் நன்கொடையாகவும் பெறப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முதல்கட்டமாக 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலா், வணிகவரி துறை முதன்மைச் செயலாளா் எம்.ஏ.சித்திக், மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி ஆகியோா் முன்னிலையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குநா் கண்ணன் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்திற்கு பேரிடா் நிவாரண நிதியாக ரூ.7.50 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 975 ஆக்சிஜன் உருளைகள், 3.5 லட்சம் சிரிஞ்சுகள் அடுத்தகட்டமாக வழங்கப்படவுள்ளதாகவும் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...