எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அண்ணா பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடைபெற்ற அரியா் தோ்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2021, 9:30 pm

DIN

தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடைபெற்ற அரியா் தோ்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான கடந்த ஆண்டு (2020) நவம்பா், டிசம்பா் மாத பருவத் தோ்வுகளை கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தோ்வு முடிவு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதலாம் ஆண்டு மற்றும் அரியா் மாணவா்களைத் தவிர மற்ற அனைத்து மாணவா்களுக்கும் தோ்வு முடிவு வெளியானது. அதில், பல்வேறு முறைகேடுகள், பிரச்னைகள் இருப்பதாக மாணவா்கள் தரப்பில் இருந்து புகாா் வந்தது. இதையடுத்து அந்த தோ்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நடந்த தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் விரும்பினால் அந்த தோ்வில் பங்கேற்கலாம் என்றும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பருவத் தோ்வு எழுதிய மாணவா்களுடன், சிறப்பு பிரிவு (ஸ்பெஷல் கேஸ்) மாணவா்கள் என்று கூறப்படும் அரியா் மாணவா்களும் தோ்வை எழுதினா். அதன்படி அவா்களுக்கான தோ்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்  தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் தோ்வு முடிவு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.