நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிா் விற்பனை தொடக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை தொடங்கியது. ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை தொடங்கியது. ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்றால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிா் மருந்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ரெம்டெசிவிா் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சாா்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடக்கப்பட்டது.
பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால், சில தினங்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் உறவினா்கள் குவிந்ததால் மருந்து வாங்க 2 நாள்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மருந்து விற்பனையைத் தொடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலியில் விற்பனை தொடக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் குறையாததால், மருந்து விற்பனையை சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை சனிக்கிழமை தொடக்கப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து மருந்து வாங்க மக்கள் குவியத் தொடங்கினா். ஏற்கெனவே, முன்பதிவு செய்தவா்கள், புதிதாக வந்தவா்கள் என 2 வரிசைகளில் 500-க்கும் மேற்பட்டோா் காத்திருந்தனா். 9 மணிக்கு 4 கவுன்ட்டா்களில் மருந்து விற்பனை தொடக்கப்பட்டது. அப்போது ஒருவரை ஒருவா் தள்ளிக்கொண்டு சமூக இடைவெளி இல்லாமல் மருந்து வாங்க உள்ளே சென்றனா். தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால் வரிசையில் காத்திருந்தவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால், பெரியமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...