தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று (மே18) அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
Updated On :18 மே 2021, 2:48 am

DIN

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று (மே18) அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இன்று அதிகாலை முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும் ஊழியர்களும் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக, உலைகளுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக, முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வுக்குப் பிறகு சேதத்தின் முழு விபரம் தெரியவரும். 

கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போல் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.