மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை: திறந்திருந்த கடைகளை அடைத்த காவல் துறை

மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த பழக்கடைகள், பூக்கடைகளை  காவல்துறையினர்  அடைக்கச் செய்தனர்.

News image
Updated On :18 மே 2021, 5:20 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பொதுமுடக்கக் கட்டுபாடுகளை மீறி திறக்கப்பட்ட பழக்கடைகள், பூக்கடைகளை காவல்துறையினர் அடைக்கச் செய்தனர்.

 தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் கரோனா இரண்டாவது அலை வேகத்தை கட்டுப்படுத்த அரசு, பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கறி மளிகைக் கடைகள் மட்டும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை திறந்திருக்கலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பழக்கடைகள் பூக்கடைகள் ஆகியவை பொது முடக்க  கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

  இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பூக்கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றை அங்கு வந்த காவல்துறையினர், வியாபாரிகளை கண்டித்து இந்தக் கடைகளை அடைக்குமாறு கூறினார்.

இதையடுத்து மேற்கண்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

மேலும், மானாமதுரை நகரில் பல்வேறு பகுதிகளில்  காவல்துறையினர் நின்றுகொண்டு பொதுமக்கள் பொது முடக்க கட்டுப்பாடுகளை மதித்து  வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் முகக் கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்றும் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.