அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் இன்றைய கரோனா நிலவரம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 48,151 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

News image
Updated On :25 மே 2021, 6:05 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 48,151 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.83 லட்சமாக உள்ளது. இவர்களில் 4.29 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 6,460 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 4,927 பேரும் அடையாறு மற்றும் அம்பத்தூரில் தலா 4,800 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 24) 4,985-ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாதத்தில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி உள்ளது.

4,985 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி 4,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 83,757-ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 29,146 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 48,157 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை சென்னையில் 6,460 போ் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.