விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

News image
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை(கோப்புப்படம்)
Updated On :3 நவம்பர் 2021, 3:19 am

DIN


திருச்சி, புதுக்கோட்டை: தொடர் கனமழை காரணமாக, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்கிறது.

திங்கள்கிழமையின் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.

மழையால் மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். மாவட்டம் முழுவதும் பரவலாக இடைவிடாது மழை பெய்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளார். 

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று புதன்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.