மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தீபாவளி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒன்றாகக் காட்சியளித்த தெய்வங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒன்று சேர காட்சியளித்த தெய்வங்கள்

Updated On :5 நவம்பர் 2021, 3:35 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பொருத்தவரை வருடத்திற்கு மூன்று முறை ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அதாவது கவுசிக ஏகாதசி, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாள்களில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது வழக்கம். அந்த வகையில் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள் கோயில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளித்தனர். 
இதற்காக வியாழக்கிழமை இரவு மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் சன்னதியிலிருந்து பெரிய பெருமாள், பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் ஆண்டாள் கோயில்  கொண்டு வரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒன்று சேர காட்சியளித்த தெய்வங்கள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.