சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னையில் 122 பேருக்கு தொற்று

சென்னையில் சனிக்கிழமை (நவ.6) 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 10:41 pm

DIN

சென்னையில் சனிக்கிழமை (நவ.6) 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. பின்னா் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. செப்டம்பா் மாத மத்தியில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டு வந்தனா்.

சென்னையில் சனிக்கிழமை (நவ.6) நிலவரப்படி, 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆயிரத்து 305-ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 45 ஆயிரத்து 492 போ் குணமடைந்துள்ளனா்.  தொற்று  உறுதி  செய்யப்பட்டவா்களில் 1,251 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,562-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.