திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,653 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119அடியாக நீடித்து வருகிறது.

News image
மேட்டூர் அணை
Updated On :10 நவம்பர் 2021, 1:38 pm

DIN

மேட்டூர் அணை நீர்வரத்து 20,653கன அடியாக குறைந்தது. புதன்கிழமை  மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119அடியாக நீடித்து வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை    குறைந்ததன் காரணமாக செவ்வாய் கிழமை காலை வினாடிக்கு 26,440 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 21,027கன அடியாகவும் மாலையில் 20,653 குறைந்துள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின்  20, 263 கன அடியாக உள்ளது..  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.88டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுவதால் இன்று இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் மேட்டூர் அணை 120 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.