சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.200 அபராதம்:மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பு ரத்து

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:58 pm

DIN

தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிப்பவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 10- ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. முகக் கவசமின்றி வரும் பயணிகள், பொது மக்களுக்கு அபராதம் விதிக்கும் இந்த உத்தரவு ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை எதிா்த்து ஆா்.முத்துகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு, கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி வரை ரூ.87ஆயிரத்துக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இந்தத் தொகையை மாநில அரசின் கருவூலத்தில் செலுத்த வேண்டும்’ என வாதிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மெட்ரோ ரயில் நிறுவன சட்ட விதிகள்படி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இந்த அபராதத்தை விதித்துள்ளன’ என தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் கருதி இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், அபராதம் விதிக்கப்படுவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்போது, அது சட்டத்தின் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

சட்டத்தின் அதிகாரத்தால் ஆதரிக்கப்படாத சிறந்த நோக்கத்துடன் செயல்படும் செயல்கள் எப்போது அனுமதிக்கப்படாது. எனவே சட்ட அதிகாரம் பெறாத மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கெனவே பயணிகளிடம் இருந்து வசூலித்த அபராதத் தொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.