எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வானிலை நிலவரம்: எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் இன்று சிவப்பு எச்சரிக்கை?

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2021, 7:16 am

DIN

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதயில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ வட தமிழக கடலோர பகுதியில்‌ நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில்‌ கரையை கடக்க கூடும்‌. இதன்‌ காரணமாக

இன்று(18.11.2021) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, சேலம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌. ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும, அரியலூர்‌, பெரம்பலூர்‌, ஈரோடு, கிருஷ்ணூரி, தர்மபுரி, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன கன மழையும்‌, திருச்‌சராப்பள்ளி, கரூர்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ தரைக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

நாளை(19.11.2021) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நாமக்கல்‌, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.