தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 756 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,01,397 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 750 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,21,021-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,388-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,76,017-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: மு.க.ஸ்டாலின் உரை
சென்னையில் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,206-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் 125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,248 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு நாளில் மட்டும் 107 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மார்ச் 13 வரை நீட்டிப்பு!

ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமி
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

